Wednesday, November 27, 2013

நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறை

தமிழகத்தைபொறுத்த அளவில் ஏன் இந்தியாவிலேயே மும்பை, சென்னை, போன்ற பெருநகரங்களின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும்அளவுக்கு வலுவான இனமாக நாம் இருக்கிறோம். இவ்வளவு இருந்தும் மற்ற சாதி அரசியல் வாதிகள் நம்மை ஏய்க்கிறார்கள். தமிழகத்திலும் மத்திய அரசிலும் ஒரு மந்திரி கூட பலம்மிக்க நாடான் மந்திரி இல்லை. வலைத்தளத்தை எடுத்துக்கொண்டால் சிலர் பொறாமையால் நம் சாதியாரை திட்டுகிறார்கள். ஈழத்தில் இருந்து பனை விளைவிக்க பனையேற அழைத்து வரப்பட்ட சாதிஎன வக்கணை பேசுகிறார்கள். இந்த நிலைமையில் நமது இளம் தலைமுறையினர் மற்ற தெலுங்கனையும், நடிகனையும் பூசை செய்து பால் அபிசேகம் நடத்துவதை விட்டுவிட்டு நமது இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் முயலவேண்டும்.
நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து. நாயக்க மன்னர்களால் அடித்து விரட்டப்பட்டவர்கள். அவர்களின் கொடுமை தாங்காமல் நாடார்கள் பட்ட அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு நாட்டை வெல்லும் அரச வம்சம் தோல்வியடைந்தவர்களை என்ன செய்யும் என்பதை நாம் தற்போதைய ஈழத்தில் நடக்கும் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம். சகோதர சண்டையால் பாண்டியர்கள் விஜயநகர அரசர்களை இங்கு இழுத்து வந்து அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். தெலுங்கர்களாகிய உங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று விடுதலை வேட்கையால் மறுத்த பாண்டியர்களும் அவர்கள் ஆதரவாளர்களான நாடார்களும் அவர்கள் இருந்த நிலையை விட்டு கீழாக்கப்பட்டனர். அவர்களிடம் யாரும் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என்று அடக்கி ஒடுக்கப்பட்டனர். தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பாளையக்காரர்கள் ஆக்கப்பட்டனர். அவர்களுடன் மற்ற தெலுங்கு பாளையங்களும் இணைந்து நாயக்கர் ஆட்சியில் மலர்ச்சியுற்றன. நாடார் இனம் ஓட ஓட விரட்டப்பட்டது. அவர்களிடம் சமாதானம் செய்து தெலுங்கர்களை சகித்துக்கொண்ட தமிழ் சாதிகளை அவர்கள் வசதிக்கேற்ப சேனாதிபதிகளாகவோ, மந்திரிகளாகவோ, ஊழியர்களாகவோ வைத்துக்கொண்டனர். மற்ற அனைவரையும் அடித்து விரட்டினர். தற்போது எப்படி ஈழத்தில் கருணா கும்பலுக்கு வாழ்வு கிடைத்ததோ அப்படி தமிழகத்தில் தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்கள் நல்வாழ்வு பெற்றனர். மக்களாட்சி நிகழும் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகள் என்றால் அந்த காலத்தை சிந்தித்துப்பாருங்கள். கொற்கை மண்டலத்தில் இருந்த நாடார் கிராமங்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வர்கள் நிலங்கள் அனைத்தும் ஆற்றுப்பாசன நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் தேரி வனாந்திரத்துக்குள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களின் செந்தூர் கோவிலும் மற்ற கோவில்களும் பறித்துக்கொள்ளப்பட்டு அவர்கள் நுழைய கட்டியிருந்த மேற்கு வாசல் அடைக்கப்பட்டது. அவர்களின் நல்ல நிலங்கள் அனைத்தும் தெலுங்கர்களுக்கும் அவர்களை ஆதரித்த மற்ற சாதியினருக்கும் வழங்கப்பட்டன. அவர்கள் முருகனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தது எல்லாவற்றையும் மறைத்து அது அய்யன் கோவில் என வழிபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குரும்பூர் நாட்டில் இந்த கொடுமை அதிகம் இருந்தது. கட்டபொம்மன் என்ற தெலுங்கு கொள்ளையன் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் வசம் இருந்த ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் தாலுகாக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கு உள்ள நாடார்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கர்களை ஆதரித்த தமிழ் சாதிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. திருவைகுண்டத்தில் 12 மறவர்களை கொலை செய்து நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டனர். குரும்பூரை ஆண்ட நாடார்கள் அனைவரும் காட்டுக்குள் விரட்டப்பட்டனர். சுண்டங்கோட்டை, மேலப்புதுக்குடி ஊரைச்சேர்ந்தவர்கள் குரும்பூரில் இருந்து விரட்டப்பட்டவர்கதான். அவர்கள் கோவிலான ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நுழைய அவர்கள் தடுக்கப்பட்டனர். காயாமொழி ஆதித்தர்களுடன் கட்டபொம்மன் போர் செய்தான். திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள் சமாதானம் செய்துவைத்தனர். நட்டாத்தி ஜமீன்தார் மட்டும் கட்டபொம்மனுடன் சமரசம் செய்து கொண்டதால் அவரை விட்டு விட்டு மற்ற அனைத்து நாடார் ஊர்களையும் தெலுங்கர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். இதன் காரணமாக நாடார்கள் நட்டாத்தியர்களை தங்கள் சாதியில் இருந்தே புறக்கணிக்கும் நிலை வந்தது. இவ்வளவு கொடுமைகள் நடந்ததால் பலர் நாடார்கள் என்ற பெயரை மறைத்து வேறு சாதி பெயரைக்கூட சொன்னதாக வரலாறு உண்டு 5 வருடம் ஆட்சி மாறும் போதே அடுத்த கட்சி ஆட்சியை தாங்க முடியாமல் கரை வேட்டியை மாற்றி கட்டும் இந்த காலத்தில் 800 வருடங்களாக நாடார்கள் பட்ட அவலத்தை சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடார்கள் ஈழத்துக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கலாம். மற்றபடி பனைவிதையை எடுத் து இங்கு வந்தார்கள் என்ற தகவல் ஆங்கில அதிகாரிகளின் அறைகுறை ஆராய்ச்சி முடிவாகும். சாதாரணமாக சிந்தித்துப்பார்த்தாலே புரியும் ஒரு பனை வளர்ந்து பலன் தர குறைந்தது 20 வருடம் ஆகும் யாராவது அதுவரை பனையை வளர்த்து அதன் பலனில் மட்டுமே காலம் கழிக்க முடியுமா? அவர்கள் சோற்றுக்கு எதை தின்பார்கள்? ஏற்கனவே தேரிக்காட்டுக்குள் இயற்கையாக இருந்த பனைமரங்களைத்தான் அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். அல்லது முன்பு அங்கு இருந்த சமூகத்தினருடன் சேர்ந்து தெலுங்கர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டு தாங்களும் பனையேறி என்று வாழ்ந்து இருக்க வேண்டும். இதுதான் நடந்தது. பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.
மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர் அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம், இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை, சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனையை ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது. நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்
இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் . முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் . அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புகின்றன மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்களால் அல்ல வெறும் ஓலை குடிசைகளே ! அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் நாயக்கர்களால் விரட்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த நாடார் மக்களின் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் . ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை.
இப்படிப்பட்ட கெட்டிபொம்முவை சுதந்திர போராட்ட வீரன் என்று வரலாறை மாற்றினர்