Wednesday, December 5, 2012

துபாய் மதகநேரி மக்கள் நலச்சங்கம்






பனைமரத்தை பணமாக்கிய நாடார்கள்



சாலை ஓரம் எல்லாம் பனை மரங்கள்
வானுயர்ந்து எழுந்து நிற்கும்
எழுச்சிமிக்க கிராமத்திலே
 
துணிச்சலுடன் நாடார் மரமேறி
குளிர்ச்சிமிக்க கள் இறக்கி
மகிழ்ச்சி கொண்ட காலம் அது..

ஆதவன் சங்கமிக்கும் பொழுதுகளில்
ஆடிப்பாடி கொண்டாட காத்திருக்கும்
மனசுகளின் ஊக்க மருந்து தேவைக்காய்
பல அடி உயரம் பக்குவமாய் ஏறி
சொட்டிச் சொட்டி நிறைந்திருக்கும்
பானைகளை இறக்கி தந்தாய் என் நாடார்

பனங்காற்று கொஞ்சம் களைப்பாற்றும்
பனங்கள்ளு கொஞ்சம் வீர மேற்றும்
நாடாரின் பொருளாதாரம் இப்பனை
நாடாரின் சொத்து இப்பனை

தனிப்பனைக்கள்ளு
தனி ருசி
பழங்கள்ளும் கருவாடும்
படு ருசி

நாடார்கள் இடுப்புபட்டி இறுகக் கட்டி
கத்தியும் முட்டியும் சொருகி
பாளைக்கயிற்றின் துணையோடு
பனையேறுவார் என் நாடார்

பசுவின் மடியில் காம்பெடுத்து
பால் கறப்பது போல்
பனையின் முடியில் வட்டெடுத்து
பனம்பால் கறப்பார் என் நாடார்

ஆப்பம் சுட ஆச்சிமாரும்
அலுப்பு தீர்க்க அப்புமாரும்
குதூகலிக்க குமரர்களும்
கள்ளுக்காக காத்திருப்பார்
அந்தக்காலம் இனிவருமா
பனைமரமே நீ சொல்லு

இன்று டாஸ்மாக் கடைகளில் காலை முதல் இரவுவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கால் வலிக்க வரிசையில் நின்று வாங்கி குடித்து பணத்தையும் அழித்து ,உடம்பையும் கெடுத்து ,குடும்பத்தையும் சீரழித்து ,கலாச்சாரத்தையும் மாற்றி வருகிறார்கள்

உங்கள்
R.மதகைபிரபு நாடார்

நாடார் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா





தென்தமிழகத்தைத் பூர்வீக குடிகளாகக் கொண்ட நாடார் சமுதாய மக்கள். உலக அளவில் முத்து வியாபாரத்தை செய்துவந்து பெருமை கொண்டவர்கள். நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான் என்ற திருமறையின் கருத்துக்கிணங்க தங்களை நீதிமான்களாக வளர்த்துக் கொண்டவர்கள் நாடார் சமுதாய மக்கள். "நாடார்" என்பதே நாட்டை ஆண்டவர்கள் என்ற கருத்தில் விரிவடைந்த வார்த்தையாகும். ஆம், நாடார்
சமுதாய மக்கள் 16,17 ஆம் நூன்றாண்டில் உலகின் சிறப்பு பெற்ற முத்து வியாபாரிகள். 18ம் நூற்றாண்டு, அவர்களை அரச குலமாக்கியது. பாண்டியர் வம்ச இனத்தின் கிளை வேராக தன்னை உட்படுத்தி நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள். தாய் தமிழகத்தின் மண்ணின் பூர்வீக மைந்தர்கள் என்ற பெருமை வாய்ந்தவர்கள் நாடார்கள் தங்களின் படைத் தளபதிகள், பிற மாநில சமுதாயத்தவர் படையெடுப்பு, ஆங்கிலேய ஆதிக்க நெருக்கம் இவைகளால் தங்கள் நாட்டுரிமையை இழந்து, மண்ணின் மைந்தர்கள் சிதறடிக்கப்பட்டார்கள் தங்கள் இனத்தைக் காக்கும் முயற்சியில், இந்தியா வெங்கும் பல்கிப்பெருகி பல காரணப் பெயர்களில் சுற்றித் திரிந்தார்கள். பிற சமுதாய உதவிகள் அற்ற முறையில் தங்கள் சமுதாயத்தை வளர்த்துக் கொண்டு பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள் அப்போது, மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி செங்கோல் ஊன்றி நின்றது.
இந்த காலக்கட்டத்தில் தான் நாடார்கள் தங்களை வியாபாரிகளாய் தனி முத்திரை பதிக்க முயன்று வெற்றியும் பெற்றார்கள். இன்றைக்கு தமிழகத்தின் வியாபார சமுதாயமாக /உழைக்கும் வர்க்கமாக தன்னை அடையாளம் காட்டி வருவது நாடார் சமுதாயம். இந்தியாவில் எந்த மாநிலம் சென்றாலும் தங்கள் சமுதாய விஸ்தரிப்பை அருமையாக செய்து வருகிறவர்கள் நாடார் சமுதாய மக்கள். நாடார், சாணார், சான்றோர் குலம் என தமிழகத்திலும், இன்னும் பல மாநிலங்களிலும் நாடார் சமுதாயம் பரவி இருக்கிறது.

அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்களின் பங்கு முத்திரை பதிக்க ஏதாவது இருந்து வருகிறது. அரசியலும், ஆன்மீக வழி காட்டலிலும் சமுதாய விழிப்புணர்வையும் பொது நல சேவையை உள்ளடக்கிய ஒரு தொண்டுள்ளத்தை, நல்ல பல கருத்துகளைச் சொல்லி வருபவர்கள் நாடார் சமுதாய மக்கள். கலை, இலக்கியம் பணிகளிலும் நாடார் சமுதாய மக்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். தமிழகம், ஏன் இந்திய அரசியலிலேயே திரும்பி பார்க்கவும், நின்று சல்யூட் அடிக்கவும் வைத்தவர் பெருந்தலைவர், கிங்மேக்கர், பாரதரத்னா கு .காமராஜர் அவர்கள். காமராஜர் அவர்களின் எளிமை, புத்திக் கூர்மை, நாட்டு வளர்ச்சிக்கான சிந்தனை - இன்றைக்கும் அனைத்து தரப்பு அரசியல் வாதிகளை பாராட்ட வைப்பதாக இருக்கிறது புதிய அரசியல் கல்வியின், அரிச்சுவடு அவரின் பொது வாழ்வு என போற்ற கூடியதாக இன்றும், என்றும் இருந்து வரும். தொழிற்துறை வளர்ச்சியில் நாடார் சமுதாய மக்களின் பங்கு, அந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து வணிகத்திற்கு வாய்ப்பு அளித்தவர்கள் நாடார்கள் இன்றைக்கு கம்பீரமாக பல பல கிளைகளோடு அதுவும் சொந்தக் கட்டிடத்திலேயே நாடார் வங்கியாகச் செயல்பட்டுவருகிற "தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க் "மாபெரும் அடையாளச் சின்னம் சங்க அமைப்புகள் மூலம் திறமையான கல்வி ஸ்தாபனங்கள் ,மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள் சிறு தொழிற் வளாகங்கள் லாட்ஜ் பொழுதுபோக்கு நிறுவனங்கள் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் ...என பற்பல சமுதாய வளர்ச்சித்தொண்டுகள் பரவி நிற்கிறது

உங்கள்
R.மதகைபிரபு நாடார்