Wednesday, December 5, 2012

பனைமரத்தை பணமாக்கிய நாடார்கள்



சாலை ஓரம் எல்லாம் பனை மரங்கள்
வானுயர்ந்து எழுந்து நிற்கும்
எழுச்சிமிக்க கிராமத்திலே
 
துணிச்சலுடன் நாடார் மரமேறி
குளிர்ச்சிமிக்க கள் இறக்கி
மகிழ்ச்சி கொண்ட காலம் அது..

ஆதவன் சங்கமிக்கும் பொழுதுகளில்
ஆடிப்பாடி கொண்டாட காத்திருக்கும்
மனசுகளின் ஊக்க மருந்து தேவைக்காய்
பல அடி உயரம் பக்குவமாய் ஏறி
சொட்டிச் சொட்டி நிறைந்திருக்கும்
பானைகளை இறக்கி தந்தாய் என் நாடார்

பனங்காற்று கொஞ்சம் களைப்பாற்றும்
பனங்கள்ளு கொஞ்சம் வீர மேற்றும்
நாடாரின் பொருளாதாரம் இப்பனை
நாடாரின் சொத்து இப்பனை

தனிப்பனைக்கள்ளு
தனி ருசி
பழங்கள்ளும் கருவாடும்
படு ருசி

நாடார்கள் இடுப்புபட்டி இறுகக் கட்டி
கத்தியும் முட்டியும் சொருகி
பாளைக்கயிற்றின் துணையோடு
பனையேறுவார் என் நாடார்

பசுவின் மடியில் காம்பெடுத்து
பால் கறப்பது போல்
பனையின் முடியில் வட்டெடுத்து
பனம்பால் கறப்பார் என் நாடார்

ஆப்பம் சுட ஆச்சிமாரும்
அலுப்பு தீர்க்க அப்புமாரும்
குதூகலிக்க குமரர்களும்
கள்ளுக்காக காத்திருப்பார்
அந்தக்காலம் இனிவருமா
பனைமரமே நீ சொல்லு

இன்று டாஸ்மாக் கடைகளில் காலை முதல் இரவுவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கால் வலிக்க வரிசையில் நின்று வாங்கி குடித்து பணத்தையும் அழித்து ,உடம்பையும் கெடுத்து ,குடும்பத்தையும் சீரழித்து ,கலாச்சாரத்தையும் மாற்றி வருகிறார்கள்

உங்கள்
R.மதகைபிரபு நாடார்

No comments:

Post a Comment