Thursday, July 3, 2014

நம்ம இதயம் முத்து அண்ணாச்சி

நம்ம இதயம் முத்து அண்ணாச்சி 
https://www.facebook.com/ulaippaluyarnthanadargal/photos/a.1401940643401957.1073741828.1401938560068832/1439480216314666/?type=1&theater

விருதுநகர் பிரபல வணிகர் உயர்திரு .வி.வி.வி.ராஜேந்திரன் -ஜெகதாம்பாள் தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர் திரு. வி.ஆர். முத்து அவர்கள் .திரு. முத்து அவர்கள் தனது ஆரம்ப பள்ளிக்கல்வியை விருதுநகர் சுப்பிரமணிய வித்தியாசாலாவிலும் ,பின்னர் திருவள்ளுவர் வித்தியாசாலாவிலும் பயின்றார்.உயர்நிலைப் பள்ளி படிப்பை மதுரை ரோடு சத்திரியா வித்தியாசாலாவிலும் பயின்றார்.பட்ட படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார்.மும்பை எம்.எம்.கே வணிகக் கல்லூரியில் b .com படித்தார்.பின் சென்னை பிரபல ஆடிட்டர் கே.வி. ராமசாமி அவர்களிடம் பயிற்சி பெற்றார்.இம் மூன்றாண்டு காலத்தில் சென்னை மற்றும் பெருநகரங்களில் செயல் படும் பெரும் வணிக நிறுவனங்களில் உள்ள தணிக்கை மேற்க் கொண்டதன் மூலமாக வணிக நிர்வாகம் பற்றிய உயர் சிந்தனைகளைப் பெற்றார்.
1978 ஆம் ஆண்டு தங்கள் குடும்ப வணிக நிறுவனமான' ஆனந்தம் நல்லெண்ணெய்' வணிகத்தில் சேர்ந்தார். 1978 ஆம் ஆண்டு டாக்டர் திரு..எஸ். காசிராஜன்-மனோன்மணி தம்பதிகளின் புதல்வி மலர்விழி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.திரு. முத்து -மலர்விழி தம்பதியினருக்கு திருமதி.பூவிதழ் B .E ,டாக்டர் .திருமதி .இளந்தளிர் MBBS .,D .Diab ஆகிய இரு மகள்களும் திரு.ராஜா விக்னேஷ் முத்து B .TECH ., M .BA ., ஆகிய மகனும் உள்ளனர்.
1978 ஆம் ஆண்டு முத்து அவர்கள் வணிகத்திற்கு வந்த புதிதில் அக்கௌண்டிங்கில் ஆர்வம் கட்டி வந்தார்.மார்கெட்டிங் தான் ஒரு வணிக நிறுவனத்தின் முக்கிய பணி என்ற தெளிவு ஏற்ப்பட்டு 1980 ல் தன முழுக் கவனத்தையும் மார்கெட்டிங்கில் செலுத்த ஆரம்பித்தார்.1980 ஆம் ஆண்டு ஆனந்தம் நல்லெண்ணெய் ராமநாத புரம், மதுரை , திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சென்னை நகரிலும் மட்டுமே விற்பனை செய்து வந்தது .திரு. முத்து அவர்கள் தமிழகம் முழுவதும் தம் விற்ப்பனையை சந்தைப் படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி ஆறு ஆண்டுகளில் ஆனந்தம் நல்லெண்ணெய் விற்ப்பனையை ஆறு மடங்காக மாற்றினார்.1980 ல் இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை ஆன ஆனந்தம் நல்லெண்ணெய் 1986 ல் ரூபாய் பன்னிரண்டு கோடிக்கு விற்ப்பனையை எட்டியது
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி 'இதயம்' என்ற புதிய பிராண்ட் நல்லெண்ணெய் உதயமானது .1980 ஆம் ஆண்டு வணிகத்தில் நுழைந்த பொழுது பிறருடன் பேச தயக்கம் காட்டும்திரு முத்து அவர்கள் jayces பயிற்சி மூலம் தன்னை மேலும் மேலும் பட்டை தீட்டிக் கொண்டார்.தலைமைப் பண்புகளும் , உற்சாகமும் , பயிற்சிகள் மூலம் ஆக்க பூர்வமான மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்ந்த திரு. முத்து அவர்கள் இதயம் நிறுவன மேலாளர்களுக்கும் , இடைநிலைப் பணியாளர்களுக்கும் பலவித சுய முன்னேற்ற பயிற்சிகளை வழங்கி இதயம் நிறுவனத்தை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்.
ஆறு கோடி ரூபாய் விற்பனையில் ஆரம்பித்த இதயம் நிறுவனம் 27 ஆண்டுகளில் பல தயாரிப்புகளை நிர்வகித்து ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் விற்பனையை எட்டி உள்ளது .இன்று உலக அளவில் 'இதயம் நல்லெண்ணெய் மற்றும் இதயம் குழுமப் பொருட்கள் சந்தைப் படுத்தப் படுகின்றன .வெகு விரைவில் 500 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்ட வேண்டும் என்ற உற்சாகத்துடன் இதயம் குழுமம் வீர நடை போடுகிறது.
1993 ஆம் ஆண்டு இந்திய ஜேய்செஸ் இயக்கம் தேசிய அளவில் வழங்கிடும் மதிப்பு மிக்க சிறந்த தொழில் சாதனையாளருக்கான "கமல் பத்ரா'விருதை வழங்கி கௌரவப் படுத்தியது .
2007 ஆம் ஆண்டு , இந்தியாவின் தலை சிறந்த வணிக சாதனையாளராக திரு.முத்து அவர்கள் தேர்வு செய்யப் பட்டு , ஜூனியர் சாம்பர் இன்டர்நேஷனல் அமைப்பின் உயரிய விருதான "TOBIP " விருது பெற்றார்
திரு.முத்து அவர்கள் பாரதத்தின் தலை சிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பெயரால் மத்திய அரசு ஏற்ப்படுத்தியுள்ள ஆராய்ச்சி அறக்கட்டளை என்னும் அமைப்பால் 'எள் விவசாயிகளின் பாது காவலர் 'என்னும் பட்டம் அளிக்கப் பட்டு பெருமைப்படுத்தப் பட்டுள்ளார்.
இவ்வாறு பன்முக திறமைகளும் பாரம்பரிய பண்பாடுகளும் பக்குவமான சிந்தனைகளும் , ஆக்கபூர்வமான அணுகுமுறையும் , அன்பு கனிந்த ஆர்வம் நிறைந்த கொடையுள்ளமும் , பாராட்டும் பெருங்குணமும் ,குறை கொண்டோரிடத்தும் நிறை கண்டு பழகும் பாங்கும் ,பயிற்சியில் நம்பிக்கையும் முயற்சியில் முனைப்பும் ,புதுமையில் நாட்டமும் , வாழ்க்கை முறையில் எளிமையும் வணிக நெறியில் நேர்மையும் கொண்டு விளங்கும் திரு.இதயம் முத்து அண்ணாச்சி அவர்களை நம் "உழைப்பால் உயர்ந்த நாடார்" பக்கம் வாழ்த்துகிறது

No comments:

Post a Comment