Sunday, March 24, 2013

பச்சை தமிழர் தன்மான தமிழர் காமராஜர்

அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயோ  உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

No comments:

Post a Comment