நம் நாடார் சமுதாய வளர்ச்சி பணத்தின் வளர்ச்சி மட்டுமல்ல என்பதை நாம் அறிவது நல்லது. இச்சமுதாய மக்கள் எத்தனை பேர் அரசு நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்தன் சமுதாயம் வளர்ந்துள்ளதா?அல்லது பின்தங்கியுள்ளதா என்று துல்லியமாகக்காண முடியும்.அரசில் நாம் மக்கள் தொகையில் 20% உள்ளோம் அனைத்துத் துறைகளிலும் குறைந்தது 20 விழுக்காடு பதவிகளில் நம்மவர்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கு மேலும் நம்மவர்கள் இருந்தால்தான் நாம் வளர்ந்துள்ளோம் என்று பொருள். தற்போதைய நிலைமையை கணக்கிட்டுப் பார்த்தால் 5% பதவிகளில் கூட நம்மவர்கள் இல்லாததையே காணலாம். தமிழ்நாடு சட்மன்றத்தில் கூட நம்மவர்கள் சுமார் 47 பேராவது இருந்திருக்க வேண்டும். ஆனால் எத்தனை நாடார் M.L.A க்கள் உள்ளனர். வெறும் சிலபேர்கள் மட்டும் உள்ளனர். நமது பங்கைக் கூட கேட்பதற்கு வக்கில்லாத நாடார்களாகதான் இருக்கிறோம் பிராமண சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு. நம்பூதிரிப் பிராமணன், ஐயர், ஐயங்கார், போற்றி, பட்டர் மற்றும் கோபாத பிராமணன், ஷடபாத பிராமணன், தைத்திரிய பிராமணன் போன்ற பிரிவுகள் உண்டு. ஆனால் பிராமண சமுதாயம் என்று வரும்போது இவர்கள் அனைவரும் ஒருமுகமாக நின்று செயல்படுகிறார்கள். அதனால், மக்கள் தொகையில் வெறும் 2 % வருகின்ற இவர்கள் அனைத்து பதவிகளிலும் முதல் நிலையில் இருக்கிறார்கள். சமுதாய வளர்ச்சிக்காக ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒருங்கிணைந்து சேவை செய்வதால்தான் அந்த வளர்ச்சி நிலையை எட்டினர். அவர்கள் என்றாவது முற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வர வேண்டும் என்று விரும்புகிறார்களா? இல்லை ஆனால் நாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தாருங்கள் என்று கேட்பதிலிருந்தே தெரியவில்லையா நாம் சமுதாய அளவில் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகிறது. இது குறித்து ஆய்வு செய்து, சிந்தித்து சமுதாயம் வளர்ச்சி அடைவதற்கு உகந்த வழிமுறைகளை கண்டிப்பாக காணவேண்டிய கட்டாயம் உள்ளது
இதில் எதாவது தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
இதில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
உங்கள்
மதகைபிரபு நாடார்
No comments:
Post a Comment